திமுக பிரமுகர் வீட்டில் 2.68.000 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் ஷேக்,ரஷீத் ஆகியோருக்கு போலீசார் வலை.!

Published:

R R R - 2026

வடவள்ளி பகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

கோவை மாவட்டம், வடவள்ளி லட்சுமி நகர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் பங்களா வீட்டில் ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு தங்கி வருகின்றனர்.

அவர்களிடம் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் வடவள்ளி காவல்துறையினர் 35க்கும் மேற்பட்டோர் பங்களாவை நேற்று மாலை சோதனை செய்தனர்.

அந்த பங்களாவில் உள்ள ஒரு அறையில் இருந்து 268 கட்டுகள் கொண்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் கண்டெடுக்கப்பட்டது.

மொத்தம் 2.68 லட்சம் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வீட்டில் குடியிருந்த ரஷீத், ஷேக் ஆகியோரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img