கி.மீ.,க்கு ஒரு பைசா அளவில்… ரயில் கட்டணம் திடீர் உயர்வு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் வணிகம்
southern railway - 2026

ரயில் கட்டணம் நேற்று திடீரென உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டண உயர்வு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் நேற்று இரவு அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அந்த அறிக்கையில்… குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில்களில் பயணிப்பதற்கான கட்டணம் கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிர் சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய வகுப்பில் பயணிப்பதற்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியில் பயணிப்பதற்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. சதாவதானி துரந்தோ உள்ளிட்ட ப்ரீமியம் வகை ரயில்களுக்கும் இந்த இந்த கட்டண உயர்வு பொருந்தும்.

புறநகர் ரயில்களுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல முன்பதிவு கட்டணம் அதிவிரைவு ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை!

ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது!

இந்தக் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.