பத்து ஆண்டு சிறைத் தண்டனை! சிறார் வதை வீடியோ! ஏடிஜிபி ரவி!

Published:

child - 2026

தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பதிவேற்றம் செய்தாலோ, பதிவிறக்கம் செய்தாலோ 10 ஆண்டுகளுக்கு மேலான கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இளம்பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டும் இரண்டு நாள் கருத்தரங்கம் தொடங்கியுள்ளது. இதில், கலந்து கொண்ட ஏடிஜிபி ரவி, குழந்தைகள் ஆபாச படங்கள் இணையதளத்தில் பகிர்ந்ததாக, கோவையில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

adgp ravi - 2026

குழந்தைகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்பவர்கள், ஆபாச படம் பார்க்கும் மனநிலையில் இருந்தால் அவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் ஆபாச படத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் ஏடிஜிபி ரவி கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img