வேத கோஷம், தேசிய கீதம்..! வேத பாடசாலையில் கொண்டாடிய… குடியரசு தின விழா!

Published:

republicday vedabhavan - 2026

முன்னர் அரசு மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த குடியரசு, சுதந்திர தின விழாக்களை இப்போது பொதுமக்கள் அனைவருமே தேசியக் கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் பொதுமக்கள் பல இடங்களில் இதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், மிக வித்தியாசமாகவும் சிறப்பாகவும் குடியரசுதின விழா கொண்டாடிய மாணவர்களின் வீடியோ ஒன்று சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அது செகந்திராபாத்தில் உள்ள வேதபவனத்தில் வேதம் படிக்கும் வித்யார்த்திகளின் உச்சரிப்பில் தேசிய கீதம் பாடி கொண்டாடப் பட்ட குடியரசு தினம்.

வேத பவனம்.. செகந்திராபாத்! பணம், பதவிக்காகக் கொடியேற்றும் அரசியல்வாதிகளில்லை; பாரதம் வாழ பிரார்த்தனை செய்யும் சுயநலமற்ற சனாதன தர்மவான்கள் இவர்கள்! அவர்களைப் பற்றி அறியவும் !!

ஒரு பத்து ரூபாய் கூட வேத பாடசாலைகளுக்கு ஆந்திர மற்றும் தெலங்காணா அரசுகள் கொடுத்தது இல்லை. அவர்களிடம் இருந்து இந்த வேத வித்யார்த்திகளுக்கு நயா பைசா கூட உதவியாகக் கிடைத்ததும் இல்லை. ஆனாலும் குதூகலத்துடன் நாட்டின் மீது பற்றும் பக்தியும் வைத்து, நாடு நன்றாக இருக்க வேண்டும், நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக, பக்தி சிரத்தையுடன் குடியரசு தின விழாவை செகந்தராபாதில் உள்ள வேத பாடசாலையில் இந்த வித்யார்த்திகள் அழகாகக் கொண்டாடினார்கள்.

அதே நேரம், ஆந்திர மற்றும் தெலங்காணாவில்
மதரசா நடத்துவதற்கு அரசாங்க சலுகைகள் அள்ளி வீசுகின்றன. மௌல்விகளுக்கு அரசாங்க சம்பளம் மாதம் ரூ 10000/-பணம் அளிக்கப் படுகிறது. சர்ச் கட்டுவதற்கும் பைபிள் வகுப்புகள் நடத்துவதற்கும் பாஸ்டருக்கு அரசாங்க சம்பளம் ரூ 10000/- அளிக்கப் படுகிறது. ஆனால், ஒரு முஸ்லிம் மதரசாவிலோ அள்ளது சர்ச்சிலோ குடியரசு விழா இல்லை.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img