சிறார் ஆபாச வீடியோ விநியோகம்: திருச்சியில் காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
arrest 1 - 2026

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் சிறார் ஆபாச வீடியோக்களை விநியோகம் செய்ததாக காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் சிறார் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த குற்றத்துக்காக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, விற்பனை செய்து வந்த 2 பேரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

திருச்சி, தென்னூரைச் சேர்ந்த காதர் பாஷா, திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பென் டிரைவ் , டிவிடி.,க்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களுடன் இணைந்து ஆபாச வீடியோக்களை விற்பனை செய்து வந்த முகம்மது அஸ்ரப் மற்றும் ரியாஜூதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள இவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.