சமீப காலமாக உணவு பற்றாக்குறையின் காரணமாக வனவிலங்குகள் காடுகளில் இருந்து வெளியே வந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, விளைநிலங்களை நாசப்படுத்திப் படுத்தி வருகின்றன. அதனால் பொதுமக்கள் அச்சத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல், வனவிலங்குகள் புகாத வண்ணம் தடுப்புகளை அதிகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி கிராமத்தில் காய்கறி தோட்டங்களும், விலை நிலங்களும் அதிகமாக இருப்பதால் அவற்றைப் பாதுகாக்கப் பல இடங்களில் சுருக்கு கம்பிகளை பொருத்தியுள்ளனர்.
நேற்று அந்த வழியாக விளைநிலங்களில் செல்ல முயன்ற புலி ஒன்று அந்த சுருக்கு கம்பியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனையடுத்து புலியின் உறுமல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால், மருத்துவர் உடனே அங்கு வரமுடியாததால் வனத்துறையினர் அங்கே முகாமிட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் புலி இருக்கும் பகுதிக்குச் செல்லாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர் அந்த இடத்துக்கு வந்த பிறகு, புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, அதனை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்