ஷ்ரேயா சித்தனகௌடர் என்ற பெண், 2016ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்தார். இந்த நிலையில் 2017ம் ஆண்டு சாலை விபத்தில் மரணம் அடைந்த 21 இளைஞரின் கைகள் ஷ்ரேயாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்பட்டது.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் பயனாக கைகள் இரண்டுமே சற்று மெலிந்து ஷ்ரேயாவின் உடலுக்கு ஏற்ப மாறியது.
இந்த நிலையில், மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் மேலுமொரு மாற்றமும் நிகழ்ந்துள்ளது. அதாவது, மாற்றுக் கைகளின் நிறம், கொஞ்சம் கொஞ்சமாக அப்பெண்ணின் நிறத்துக்கு ஏற்ப மாறியுள்ளதுதான் அது. தற்போது அந்த மாற்றுக் கையின் நிறும், ஷ்ரேயாவின் உடல் நிறத்துக்கு ஏற்ப வெள்ளையாக மாறியுள்ளது.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் ஆராய்ந்து வருகிறார்கள்.
ஆணின் கைகளை பெண்ணுக்கு பொருத்தியதும், இரண்டு கைகளும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியதும் ஆசியாவிலேயே இது முதல் முறை என்பதால், ஆணின் கைகள், பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்றவாறு மாறியிருப்பதும் மருத்துவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.