இவர்கள் திருந்தினால் மட்டுமே கொரோனா பரவலுக்கு தீர்வு கிட்டும்! : இந்து தமிழர் கட்சி!

Published:

chennai thandaiyarpettai muslims oppose police and removed gurards1

மதங்களைக் கடந்து மனிதம் பேசும் நபர்கள்… இதற்கு வாய் திறப்பார்களா? இல்லை “காந்தி மடத்து குரங்குகள் போல இருப்பார்களா? என்று இந்து தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் இது குறித்து தெரிவித்த அறிக்கையில்….

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மூன்றாவது தெரு முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லீம் தம்பதியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட உடன் அந்த தெருவை மூடி சீல் வைக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் முயன்றனர். இதை தடுத்து அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் சுகாதார, மருத்துவ பணியாளர்களை துரத்தி அடித்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அத்தெருவில் 2 சிறுவர்கள் உட்பட மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேதாஜி நகர் மூன்றாவது தெருவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தை சேர்ந்த முஸ்லீம்கள் பலரே வெளியே சுதந்திரமாக சுற்றி வருவதால் அருகில் உள்ள பிற பகுதிகளுக்கு கொரோனா
பாதித்து விடாமல் இருப்பதற்க்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் காவல்துறை உதவியுடன் அப்பகுதியை சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கும் முயற்சியில் மீண்டும் நேற்று 28/04/2020 ஈடுப்பட்டனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
chennai thandaiyarpettai muslims oppose police and removed gurards

இந்நிலையில் அங்கு சையது (ஏற்கனவே 307 உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்) மற்றும் சாதிக் என்பவர்கள் தலைமையில் கூடிய முன்னூறுக்கும் மேற்ப்பட்ட முஸ்லீம்கள் சீல் வைத்த தடுப்புகளை உடைத்து எறிந்து சுகாதார பணியாளர்களையும், காவல்துறையையும் துரத்தி அடித்தனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையர் , உதவி ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பார்த்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் காவல்துறை அதிகாரிகளையும் ஆபாசவார்த்தைகளில் திட்டியுள்ளனர் அப்பகுதி முஸ்லீம் பெண்கள்.

பின் முஸ்லீம் அமைப்பு தலைவர்களை அழைத்து இரவு 12 மணி வரை சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது காவல்துறை. நாங்கள் தடுப்பு அமைக்க சம்மதிக்க மாட்டோம் , வேண்டுமானால் எங்கள் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களை நேதாஜி நகர் மூன்றாவது தெருவில் அமர வைத்து யார் வெளியில் செல்ல வேண்டும் என நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம் என கூறியுள்ளனர். காவல்துறையும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்து உள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

சென்னையில் கொரோனா பாதித்த அனைத்து பகுதிகளையும், தெருக்களையும் பாரப்பட்சம் இன்றி மூடி சீல் வைக்கும் காவல்துறையும், சுகாதரத்துறையும் முஸ்லீம் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து விடுகிறது என குமுறுகின்றனர் சென்னை பகுதி வாசிகள்.

முஸ்லீம் வசிக்கும் பகுதிகள் எல்லாம் இந்திய எல்லைக்குள் வராது போல், அது பாகிஸ்தான் அல்லது சிரியாவின் பிரதேசங்கள் போல என சுகாதரத்துறை பணியாளர்களே புலம்பி தவிக்கிறார்கள். நேதாஜி நகர் ஒன்றாவது தெரு அருகில் வசிக்கும் பிற மதத்தவர்களும், கொரோனா பாதித்த முஸ்லீம் குடும்பங்கள் சுதந்திரமாய் வெளியே சுற்றி திரிவதால் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

மனிதம் பார்த்து உதவும் அரசிற்கு கெட்ட பெயர் உருவாக்கும் நோக்கத்தோடு, மதம் பார்த்து பிரச்சனை செய்யக்கூடிய இது போன்ற நபர்கள் திருந்தினால் மட்டுமே இதற்கு தீர்வு! என்று இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் இராம இரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img