வெந்தயக்கீரை மசால் வடை
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு 2ஆழாக்கு(2 மணி நேரம் ஊற வைக்கவும்)
வெந்தயக்கீரை 1கை அளவு
இஞ்சி 1துண்டு
பச்சை மிளகாய் 1
கொத்தமல்லி சிறிது
சீரகம் 1தேக்கரண்டி
எண்ணெய் பொரிக்க
உப்பு தேவையான அளவு
செய்முறை
ஊறவைத்த கடலை பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து சிறிது கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
அரைத்த மாவுடன் சிறிது கொத்தமல்லி தழை நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
சிறிது மாவு எடுத்து வடை போல தட்டி கொள்ளவும்
சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்
சூடாக பரிமாறவும்.ஆரோக்கியமான வெந்தயக்கீரை வடை தயார்