கொரோனா தடுப்புகளை உடைத்து போலீஸாரை மிரட்டிப் பணிய வைத்த முஸ்லிம்கள்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
chennai thandaiyarpettai muslims oppose police and removed gurards
சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா தடுப்புகளை உடைத்து, காவல்துறையினரை மிரட்டி பணிய வைத்த முஸ்லீம்கள் -28/04/2020

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மூன்றாவது தெரு முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி. இங்கே கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லீம் தம்பதியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னர், அந்தத் தெருவை மூடி சீல் வைக்க சுகாதாரத் துறை பணியாளர்கள் முயன்றனர். ஆனால் இதை தடுத்து அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் சுகாதார, மருத்துவப் பணியாளர்களை துரத்தி அடித்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்தத் தெருவில் 2 சிறுவர்கள் உட்பட மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேதாஜி நகர் மூன்றாவது தெருவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் பலர் வெளியே சுதந்திரமாக சுற்றி வருவதால் அருகில் உள்ள பிற பகுதிகளுக்கு கொரோனா பாதித்து விடாமல் இருப்பதற்க்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் காவல்துறை உதவியுடன் அப்பகுதியை சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்காக, மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்றனர். அங்கு சையது (ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்) மற்றும் சாதிக் ஆகியோர் தலைமையில் கூடிய 300-க்கும் மேற்ப்பட்ட முஸ்லீம்கள், போலீஸ் அதிகாரிகள் சீல் வைத்த தடுப்புகளை உடைத்து எறிந்து சுகாதார பணியாளர்களையும், காவல்துறையையும் அங்கிருந்து துரத்தி அடித்தனராம். 

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் காவல்துறை அதிகாரிகளையும் மிகவும் கேவலமாகவும் ஆபாச வார்த்தைகளாலும் அப்பகுதி முஸ்லீம் பெண்கள் அணி திரண்டு திட்டியுள்ளனர். அதைக் கேட்டு போலீஸாரால், வெறுமனே அதிர்ச்சி அடையத்தான் முடிந்தது.

பின்னர் முஸ்லீம் அமைப்பு தலைவர்களை அழைத்து இரவு 12 மணி வரை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் காவல்துறை உயரதிகாரிகள். நாங்கள் தடுப்பு அமைக்க சம்மதிக்க மாட்டோம் , வேண்டுமானால் எங்கள் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களை நேதாஜி நகர் மூன்றாவது தெருவில் அமர வைத்து யார் வெளியில் செல்ல வேண்டும் என நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் என கூறியுள்ளனர். நாட்டின் பொதுச் சட்டத்தைக் காக்க வேண்டிய காவல் துறை, தண்டையார்பேட்டை முஸ்லிம் ராஜ்ஜீயம் நடத்தும் தனிநபர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு அதையே செய்யட்டும் என சம்மதிதுள்ளனர் காவல் துறையினர்.

சென்னையில் கொரோனா பாதித்த அனைத்து பகுதிகளையும், தெருக்களையும் பாரபட்சம் இன்றி மூடி சீல் வைக்கும் காவல்துறையும், சுகாதரத்துறையும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து விடுவதாக மற்ற மக்கள் மனம் குமுறி புகார்தெரிவிக்கின்றனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தில் கொரோனாவால் பலர் கஷ்டப் பட்டு வருகின்றனர் என்றும் அறிக்கை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, இதற்கான மூல காரணத்தைத் தெரிந்து கொண்டும் மர்ம தேசம் மர்ம நபர் என்று மழுப்பிக் கொண்டு, தமிழகத்தின் மற்ற மக்களுக்கும் கொரோனா பரவுவதை கையைப் பிசைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.