ஜம்முன்னு ப்ரட் ரவை ஜாமூன்

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
bread soji jamoon

ப்ரட் ரவை ஜாமூன்

தேவையான பொருட்கள்


ஸ்லைஸ் ப்ரட் -6
சீரோட்டி ரவை -1/2 கப்
பால் பவுடர் -2 டேபிள்ஸ்பூன்
மைதா -2 ஸ்பூன்
சோடா உப்பு -2 சிட்டிகை
நெய் -3 டேபிள்ஸ்பூன்
சூடான பால் -1 கப்

சர்க்கரை சிரப் செய்ய:
சர்க்கரை -2 கப்
தண்ணீர் -3/4 கப்
ஏலக்காய் -6
ரோஸ் வாட்டர் -1/2 ஸ்பூன்
நெய் -பொரிப்பதற்கு

சர்க்கரை சிரப் செய்ய:

சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

ஏலக்காய் ஐ இடித்து தூள் செய்து போட்டு கொதிக்க விடவும்

ஒரு கம்பி பதம் வந்ததும் ஒரு துளி லெமன் சாறு விட்டு கலந்து ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கி வைக்கவும்

ஜாமூன் செய்ய:

வெறும் வாணலியில் ரவையை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுக்கவும்

ப்ரட்டின் ஓரங்களை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி வைக்கவும்

ரவை உடன் நறுக்கிய ப்ரட் துண்டுகள் சேர்த்து சூடான பால் விட்டு பதினைந்து நிமிடங்கள் வரை ஊறவிடவும்

நெய் உடன் சோடா உப்பு சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்

பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

ஊறவைத்த ரவை ப்ரட் கலவையை சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்

மைதா தூவி நன்கு சாப்ட்டாக பிசைந்து கொள்ளவும் அடித்து அழுத்தி பிசைய வேண்டாம் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்

சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

வாணலியில் நெய் விட்டு சூடானதும் சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

நெய் அதிக சூட்டில் இருக்க கூடாது தீயை குறைத்து வைத்து நிதானமாக பொரித்து எடுக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.