
பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி ராஜா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் வசித்து வரும் இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போதும் தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் சிவாஜி ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவாஜி ராஜா சிவாஜி ஒக்கடே, பெல்லி சந்ததி, தேவுடு, சமுத்திரம், ஷங்கர் தாதா எம்.பி.பி.எஸ், வினோதம், சம்பங்கி உள்ளிட்ட 150 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.