April 30, 2025, 10:44 PM
30.5 C
Chennai

அப்பாவை டபுள்ஸ் வைத்து… 1,200 கி.மீ., சைக்கிளில் மிதித்து… ஊர் வந்து சேர்ந்த சிறுமி!

கூர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு, காயமடைந்த தந்தையை சைக்கிளில் பின்னால் அமர வைத்து அழைத்து வந்த 15 வயதான சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். இவர், டில்லி அருகேயுள்ள கூர்கானில் இ ரிக்ஷா ஒட்டி வருகிறார். அவரது மனைவி, தர்பங்காவில் அங்கன்வாடி ஊழியராக உள்ளார். அவர்களுக்கு ஜோதி(15) மற்றும் 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டில்லியில் மோகன் சாலை விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டது. இதனால், ஜோதி தந்தையை பார்க்க வந்துள்ளார்.

அதே நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறுமி தனது தந்தையுடனேயே தங்க நேரிட்டது. ஊரடங்கு காரணமாகவும், விபத்தில் சிக்கியதாலும், மோகனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், கைகளில் இருந்து பணம் செலவாகிவிட, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துள்ளார். மோகனும், ஒரு வேலை மாத்திரை வாங்குவதை நிறுத்தி, அதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு ஒரு வேளை சாப்பிட்டுள்ளனர்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோவிலில் ஏப்.7 முதல் மூலஸ்தான பகுதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை!

அதேநேரத்தில், வீட்டு உரிமையாளரும், இருவரையும் உடனடியாக காலி செய்யும்படி மிரட்டல் விடுத்தார். இருவரும் எவ்வளவு கெஞ்சியும் அவர் மசியவில்லை. இதனால், ஜோதி சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்தார். அதேநேரத்தில் ஊர் சென்றால், தனது தந்தையுடன் தான் என்பதில் முடிவு செய்தார். ஊரடங்கு காரணமாக ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து இல்லாததால், சைக்கிள் மூலம் ஊர் திரும்ப முடிவு செய்தார்.

இதற்காக தெரிந்தவர்களிடம் பணம் கடனாக வாங்கி, சைக்கிள் ஒன்றை வாங்கினார். அதில் ஊர் திரும்ப ஜோதி தயாரானார். ஆனால், அதில் சிக்கல் மற்றும் ஆபத்து அதிகம் என தந்தை எடுத்து கூறியும். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜோதி, தந்தையை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பினார். ஜோதி சைக்கிள் ஓட்ட, பின்னால் மோகன் அமர்ந்து கொண்டார்.

கூர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு, எட்டு, நாள் சைக்கிள் பயணத்திற்கு பின்னர் வந்து சேர்ந்தார். தினமும் 50 அல்லது 60 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டிய ஜோதிக்கு, வழியில் லாரி டிரைவர்கள் உதவியுள்ளனர். இந்த பயணத்தின் போது ஒரு சில வேலைகளில் அவர்களுக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை.

ALSO READ:  IPL 2025: 18 ஆண்டுகளில் பெங்களூரு பெற்ற முதல் வெற்றி

சைக்கிளில் சொந்த ஊர் திரும்பிய ஜோதியின் கதை கேட்டதும், அப்பகுதி மக்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள், சிறுமியை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கியுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் ஜோதிக்கு உதவுவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 9 ம் வகுப்பில் சேர்த்து படிக்க வைக்கவும், நிதியுதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பயணம் குறித்து ஜோதி கூறுகையில், பயணத்தின் போது, வெளிமாநில தொழிலாளர்களுக்காக இலவசமாக உணவு வழங்கப்படும் இடங்களில் மட்டும் சாப்பிட பயணத்தை நிறுத்தினேன். கடைசியாக எட்டு நாள் பயணத்திற்கு பின்னர் சொந்த ஊர் வந்து சேர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமியின் பயணத்தை அறிந்த தேசிய சைக்கிளிங் அமைப்பு, இந்த சாதனையை நிகழ்த்திய சிறுமி நிச்சயம் திறமை மிக்கவராக தான் இருப்பார். அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். ஜோதி போன்ற ஒரு திறமையாளரை தேடி வருகிறோம். சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர் ஒரு நாளைக்கு 100 கி.மீ., சைக்கிள் ஓட்டினால், அவரை சிறந்த பயிற்சி எடுத்துள்ளார் என நாங்கள் கருதுவோம் என தெரிவித்தார்.

ALSO READ:  காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories