
மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் ரேசன் கடைக்காரை, இரு சக்கர வாகனத்தில் சென்று நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரை பெத்தானியாபுரத்தில் திங்கள்கிழமை காலை கொரோனா நிவாரண உதவித் தொகைகளை, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது விழா மேடை அருகே வந்த கார்த்திகை செல்வி என்ற பெண், அமைச்சரிடம் ரேசன் கடையில் அளவு குறைத்து வழங்கப்படுவதாக முறையிட்டார்.
இதை கேட்ட அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, கட்சிக்காரர் ஒருவருடன் கோபமாக இருசக்கர வாகனத்தில் அப் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று, திடீரென ஆய்வு மேற்கொண்டதில், குடிமை பொருட்களை எடையாளர் குறைத்து வழங்குவது தெரிய வந்தது.
இதனையடுத்து, கடையின் விற்பனையாளர் தர்மேந்திரனை பணி இடைநீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் ராஜூ.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை