கோவாக்சின்: தமிழரின் பங்களிப்பு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
covaxin dr

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, ‘Bharat Biotech’ நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன.

இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி COVAXIN தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட உள்ளது என ICMR கூறியுள்ளது.

Bharat Biotech நிறுவனத்தை நிறுவியவர் கிருஷ்ணா எல்லா. இவர் ஒரு தமிழர் என்பது நமக்கு பெருமை. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பட்டப்படிப்பை முடித்ததும் ‘Bayer’ என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவர், ‘பிரீடம் பிரம் ஹங்கர்’ எனும் உதவித்தொகை கிடைக்க, அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார்.

டாக்டர் கிருஷ்ணா எலா தனது P.hd பட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவில் உள்ள சார்லஸ்டனின் தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி ஆசிரியராக பணியாற்றினார். கிருஷ்ணா எல்லாவின் சாதனைகளை அங்கீகரித்து பல தேசிய, சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.

உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனம் எனும் சாதனையை படைத்துள்ளது அவரது நிறுவனம். “COVAXIN” விரைவில் இந்த மருந்து செயல்பாட்டுக்கு வர உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.