பாஜக எம்பி., மஹந்த் சந்த் நாத் காலமானார்: மோடி இரங்கல்!

இந்தியா சற்றுமுன்

புது தில்லி:

ஆல்வார் பாஜக., எம்பி., மஹந்த் சந்த் நாத், புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் கேன்ஸர் நோய் முற்றி காலமானார்.

61 வயதான மஹந்த், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை தோற்கடித்து, எம்.பி. ஆனவர். சந்த் நாத், கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தார். நோய் முற்றிய நிலையில் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மஹந்த் சந்த் நாத், தனது சமூகப் பணிகளால் மக்கள் மத்தியில் என்றென்றும் நினைவுகூரப் படுவார் என்று கூறியுள்ளார்.

அவரது மறைவுக்கு பாஜக தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.