ஆந்திர ஸ்வப்னா! கில்லாடி மணமகள்! மூன்றாம் கணவரின் ‘உளவு’ வேலையால் மாட்டிக் கொண்டார்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
lady three marriages 1 - 2026

பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தேனகொண்டவில் ஒரு நித்திய மணப்பெண் குட்டு வெளிப்பட்டது. மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் வாழ்க்கையில் செட்டிலான பையன்களை தேடுவதும் திருமணம் புரிந்து கொண்டு சிறிது காலம் குடும்பம் நடத்துவதும் அதன்பின் பயமுறுத்தி செட்டில்மென்ட் செய்து கொள்ளவும் இந்த நித்திய மணப்பெண்ணுக்கு வழக்கமான செயல்.

யாராவது எதிர் திரும்பினால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்வது அவளுடைய செயல். அண்மையில் அவளுடைய மூன்றாவது கணவன் போலீசாருக்கு புகார் செய்ததால் உண்மை வெளிச்சமானது.

lady three marriages 2 - 2026

விவரங்கள் இதோ… திருப்பதியைச் சேர்ந்த இளம்பெண் பதங்கி ஸ்வப்னா என்கிற பதங்கி ஹரிணி என்கிற நந்தமுராரி ஸ்வப்னா… இவ்வாறு பெயர்களை மாற்றி அழகாக மூன்று பெயர்களை வைத்துக் கொண்டுள்ளாள்.

மேட்ரிமோனியல் வெப்சைட்டில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று பயோடேட்டா வைத்துக்கொண்டு வசதி படைத்த இளைஞர்களை நம்பவைத்து தன் வலையில் விழச் செய்து உள்ளாள்.

lady three marriages 3 - 2026

திருமணம் செய்துகொண்டு சிறிது காலம் குடும்பம் நடத்திய பின், நான் தனியாக பிரிந்து இருக்கப் போகிறேன் என்று கூறி அவர்களிடம் செட்டில்மென்ட் பேசிக் கொள்வாள்.

இவ்வாறு சென்ற ஆண்டு டிசம்பரில் பிரகாசம் மாவட்டம் தேவகொண்ட மண்டலம் வீரேபல்லி கிராமத்தைச் சேர்ந்த ராமாஞ்சநேயுலு என்ற இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். மூன்று மாதங்கள் அவர்கள் ஹைதராபாதில் குடுத்தனம் செய்தார்கள்.

டென்மார்க்கில் பணிபுரியும் ராமாஞ்சனேயுலு ஸ்வப்னாவை அங்கு அழைத்துச் செல்வதற்கு திட்டமிட்டார். ஆனால் அவள் அவரோடு செல்வதற்கு நிராகரித்தாள். பாஸ்போர்ட்டுக்கு இப்போதே விண்ணப்பம் செய்ய முடியாது என்றும் சில வேலைகள் இருக்கின்றன என்றும் கூறினாள்.

அதனால் ராமாஞ்சநேயுலு தனியாக டென்மார்க் சென்றுவிட்டார். ஆனால் ஸ்வப்னா நடவடிக்கை மீது சந்தேகம் வந்த அந்த இளைஞன் உண்மை விஷயம் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் ஆராயத் தொடங்கினார். அதனால் ஸ்வப்னாவின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

ராமாஞ்சனேயுலு வுக்கு முன்பே அவள் வேறு இருவரை திருமணம் புரிந்து கொண்டது தெரிந்து போனது. சித்தூரை சேர்ந்த பிரித்திவிராஜ், ஆத்மாகூரைச் சேர்ந்த சுதாகர் என்ற வேறு இருவரோடு அவளுக்கு கடந்த காலத்தில் திருமணம் ஆனதாக ராமாஞ்சநேயுலு கண்டுபிடித்தார்.

பிரத்விராஜ் மீது திருப்பதி மகிளா போலீஸ் ஸ்டேஷனில் ஸ்வப்னா வழக்கு கூட பதிவிட்டதாக தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்ல திருப்பதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 6 லட்சம் வசூல் செய்த குற்றங்கள் கூட ஸ்வப்னா மீது உள்ளன. இந்த விவகாரத்தின் மீது திருப்பதி சிசிஎஸ் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு கூட பதிவாகியுள்ளது.

lady three marriages 4 - 2026

விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டபின் ராமாஞ்சனேயுலு ஸ்வப்னாவை அது குறித்து வினவினார். அதனால் என்ன? திருமணம் புரிந்து கொண்டதால் முப்பது லட்சங்கள் கொடுத்து செட்டில்மெண்ட் செய்து கொள்ளவேண்டும் என்று சொன்னாள் இளைஞி. அவளுடைய அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்ததால் அப்பெண் தோனகொண்ட போலீஸ் ஸ்டேஷனில் ராமாஞ்சனேயுலு மீது புகார் அளித்தாள்.

மறுபுறம் ஸ்வப்னா விவகாரம் மீது இளைஞனின் குடும்ப அங்கத்தினர்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் ஸ்வப்னாவின் ஏமாற்று வேலைகள் வெளிப்பட்டன. ராமாஞ்சநேயுலு வழக்கு விஷயமாக டென்மார்க்கில் இருந்து வரவேண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் வர இயலாத நிலை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.