ஆடி 18 – ஞாயிறு முழு ஊரடங்கை ஒத்தி வைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

Published:

amma mandapam srirangam cauvery
amma mandapam srirangam cauvery – file picture

ஆடி 18- ஞாயிறு அன்று முழு ஊரடங்கை ஒத்தி வைக்குமாறு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட் அறிக்கையில், ஆடி 18 வரும் ஆக. 2 ஞாயிறன்று வருவதால் பொது முடக்கத்தை, முழு ஊரடங்கை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆடி பண்டிகை ஆடி18 ஆடிப்பெருக்கை நாம் நீர்நிலை களில், நதிக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் இட்டு வணங்கி வீடுகளில் கடவுள் வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். இந்த கொரானா காலகட்டத்தில் பொது இடங்களில் கூடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை நாம் உணர்கிறோம்!

இருப்பினும் உளவியல் ரீதியாக மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரங்களில் தங்கள் வீடுகளிலாவது முன்னோர்களுக்கு படையலிட்டு வணங்குவது மக்களுக்கு ஏதோ ஒரு சிறு ஆத்மதிருப்தி கிடைக்கும்.

அதற்கும் இடையூராக வரும் ஞாயிறன்று ஆடிப்பெருக்கு வருகிறது. அன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு பெரும் இடையூறாக இருக்கும். ஆகவே வரும் ஞாயிறன்று வரவிருக்கும் பொது முடக்கத்தை ஒத்தி வைக்குமாறும் வேறு ஒரு நாளில் மாற்றி அமைத்திட
இந்து மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்… என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

Related articles

Recent articles

spot_img