கொரோனா: மலேசியாவுக்கு சென்று தொற்றை பரப்பிய நேசர் முகமது சாபுர் பாட்ஷா! 5 மாத சிறை ரூ.12,000 அபராதம் விதித்த அரசு!

Published:

Screenshot_2020_0814_140016

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் நேசர் முகமது சாபுர் பாட்ஷா. இவருக்கு 57 வயது ஆகிவிட்டது ஆகிறது. இவர் மலேசியாவில் உள்ள மாநிலத்தில் சொந்தமாக உணவகம் வைத்திருக்கிறார்.

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் மலேசியாவுக்கு சென்று உள்ளார். அங்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டு அனுப்பி உள்ளனர்.

ஆனால் இவர் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவருடைய உணவகத்திற்கு சென்று பணியை துவங்கி உள்ளார். இதை அடுத்து மூன்று நாட்கள் கழித்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த மூன்று நாட்கள் இடையில் அவருடைய செயலால் 45 பேருக்கும் மேல் கொரோனா வைரசால் பரவி உள்ளது. மலேசியாவின் பிற இடங்களில் கொரோனா பரவலை விட சிவகங்கையில் இருந்து வந்தவர் மூலம் அதிகமாக பரவியதால், “சிவகங்கை க்ளஸ்டர்” என்று மலேசியா சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேசர் முகமது சாபுர் பாட்ஷா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் பின் விசாரணையில் அவருக்கு ஐந்து மாதம் சிறையும் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் மலேசியா ரிங்கிட் அபராதமும் என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img