December 6, 2025, 1:39 PM
29 C
Chennai

வீட்டை பூட்டிவிட்டு அழகு நிலையம் சென்ற பெண்! வீட்டிற்கு வந்த போது காத்திருந்த அதிர்ச்சி!

Screenshot_2020_0814_141312

மணப்பாறையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை திறந்து உள்ளே இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 13-வது வார்டுக்குள்பட்ட கோவில்பட்டிசாலை திருவள்ளூவர் நகரில் வசித்து வருபவர் பொன்னம்பலம். இவர் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மனைவி வைரமணி ராஜவீதியில் தையலகம் வைத்து நடத்தி வருகிறார். இம்மாத இறுதியில் மகளுக்கு திருமணம் வைத்திருக்கும் நிலையில் அதற்கான 18 சவரன் நகையை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

நேற்று பிற்பகலில் பொன்னம்பலம் பணிக்கும், வைரமணி தையலகத்திற்கும் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது மகள் முகஅழகு செய்வதற்காக வீட்டை பூட்டி அருகில் ரகசியமாக ஒரு இடத்தில் சாவியை வைத்துவிட்டு அழகு நிலையம் சென்றுள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய பெண் மீண்டும் சாவியை எடுத்து வீட்டை திறந்து இயல்பாக நிலையில் இருந்துள்ளார். இரவில் வீட்டில் இருந்த பீரோவை திறந்தபோது அதில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டும் அதிலிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து பொன்னம்பலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலையடுத்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா தலைமையிலான காவலர்கள் கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகை பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories