இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: சௌம்யா சுவாமிநாதன்!

Published:

Screenshot_2020_0815_163038

கொரோனா குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கும்,” என, உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவர் சவுமியா சாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அதில் ஒன்று 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கி வருகிறது.

இக்குழுவிற்கு ஆலோசனை அளிப்பதில், உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார். அமெரிக்காவிலிருந்து பலமுறை காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் வழங்கினார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

விருதைப்பெற்ற பின், சவுமியா சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது. உலக அளவில் 200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளன.

நமது நாட்டில், 8 நிறுவனங்கள் அதற்கான முயற்சி எடுத்து வருகின்றன. அதற்கு அரசும் உதவி வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். விரைவில் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். அதற்கான நிதி திரட்டலில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img