நடிகர் முரளியின் மகனுக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளுக்கும் நடந்த காதல் திருமணம்!

Published:

seviar-daughter

மாஸ்டர் படத்தை தயாரித்துள்ள சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவை நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் எளிமையான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் உறவினர்.
சிங்கப்பூரில் ஒன்றாக படித்து வந்த மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷும், சேவியரின் மகள் சினேகாவும் காதலித்து வந்தனர்.

இவர்களது திருமணம்த்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Murali-son

ஆனால் லாக்டவுன் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் எளிமையான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது திருமணம் நடைபெற்றது.

Atharva-bro

பிரபலர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் அமலில் உள்ளதால், நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களது திருமண புகைப்படங்கள் இப்போது தான் வெளியாகியுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img