பிரசன்னாவின் பிறந்தநாள்: வாழ்த்துக்களோடு மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
prasanna-daughter

கணவரான பிரசன்னாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சினேகா – பிரசன்னா தம்பதியினர் தங்களது இரண்டாவது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்

கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் தான் சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. அதனை பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘தாய் மகள் பிறந்தாள்’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார்.

ஆத்யந்தா என்று பெயரிடப்பட்டுள்ள அவரது குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகியும் , குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத நிலையில், இன்று நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை கூறி தனது மகளுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தங்களது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சினேகா பிரசன்னாவின் அழகிய மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

senaka prasanna

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.