
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் தர்ஷன். இவர் தான் டைட்டில் வெல்லார் என்று கூறப்பட்ட நிலையில், முகின் வெற்றி பெற்றார்.
இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற தர்ஷன் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டி முடியும் சில நாட்களுக்கு முன்பு வெறியேறினார்.
அப்போது தான் இவருக்கும் நடிகை சனம் ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தது தெரியவந்தது. இவர் மீது சனம் போலீஸில் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்திருந்தார். இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டனர். இவர் பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஒரு நடிகையுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படங்களில் நடிக்க உள்ளதாக தர்ஷன் கூறிய நிலையில், எந்த அப்டேட்டும் இல்லை. இப்போது தர்ஷன் தனது இன்ஸ்டாவில் சத்யா சீரியல் புகழ் ஆயிஷாவுடன் இணைந்து ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.

தாய்க்குப் பின் தாரம் என்ற ஆல்பத்தில் தர்ஷன் – ஆயிஷா ஜோடி நடித்துள்ளனர். இவர்களின் ஜோடி சூப்பர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சத்யா சீரியலில் குட்டி முடியுடன் கம்பீரமாக நடித்து வரும் ஆயிஷா, இந்த ஆல்பத்தில் அப்படியே நேரெதிராக நடித்துள்ளார்