அசந்து தூங்கிய இளம்பெண் வயிற்றுள் புகுந்த 4 அடி நீள பாம்பு! அதிர்ந்த மருத்துவர்!

Published:

snake-in-lady-stomach
snake-in-lady-stomach

அசந்து உறங்கிய இளம்பெண் வயிற்றுக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பை அகற்றிய மருத்துவர், அது பாம்பு என்பதை உணர்ந்த போது அச்சத்தில் அலறி பின்வாங்கிய காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவிலுள்ள லவாசி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். தூக்கம் கலைந்து எழுந்தபோது தனது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது வயிற்றுக்குள் ஏதோ புகுந்துள்ளது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். உடனடியாக அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்று தெரிந்து வெளியேற்றுவதற்காக எண்டோஸ்கோபி மூலம் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். வாய் வழியாக எண்டோஸ்கோப் கருவி செலுத்தப் பட்டு, வயிற்றுக்குள் துழாவித் தேடியது. பின்னர் அதனுடன் சேர்ந்து அந்த உயிரினத்தை வெளியில் பிடித்து இழுத்துள்ளனர். .

எண்டோஸ்கோபி கருவியுடன் நீளமாக வந்ததைப் பிடித்து இழுத்த பெண் மருத்துவர், முதலில் அது என்ன என்பதைக் கவனிக்கவில்லை. ஆனால், முழுவதும் வெளியே எடுத்த போது, அது ஒரு 4 அடி நீள பாம்பு என்பதை உணர்ந்ததும், பதறி பின்வாங்குகிறார். இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=DXZkvWnOBsI
ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img