பிப்ரவரி 24, 2021, 11:05 மணி புதன்கிழமை
More

  வடசென்னையின் ஐகான்… அகஸ்தியா தியேட்டர் செப்.1ம் தேதியுடன்… நிரந்தர மூடல்!

  Home சற்றுமுன் வடசென்னையின் ஐகான்… அகஸ்தியா தியேட்டர் செப்.1ம் தேதியுடன்… நிரந்தர மூடல்!

  வடசென்னையின் ஐகான்… அகஸ்தியா தியேட்டர் செப்.1ம் தேதியுடன்… நிரந்தர மூடல்!

  வடசென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்த இந்த தியேட்டர், வடசென்னையின் அடையாளமாகவும் இருந்தது.

  agasthya
  agasthya

  வட சென்னையின் ஐகான் எனப்படும், தண்டையார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ‘அகஸ்தியா’ திரையரங்கம் நாளை முதல் நிரந்தரமாக மூடப் படுகிறது.

  அகஸ்தியா திரையரங்கம் 1967ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தத் திரையரங்கத்தில் முதல் படமாக ஆர்.முத்துராமன், நாகேஷ், சௌகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்த ‘பாமா விஜயம்’ திரையிரப்பட்டது. அது முதல் பல வெற்றிப் படங்கள் இத்திரையரங்கில் திரையிடப்பட்டு வந்தன.

  வடசென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்த இந்த தியேட்டர், வடசென்னையின் அடையாளமாகவும் இருந்தது. இந்த திரையரங்கத்தில், திரைப்பட படப்பிடிப்புகளும் நடந்துள்ளன என்பது இதன் பெருமையை பறைசாற்றும்.

  வெவ்வேறு கால கட்டங்களில் ஹீரோக்களின் படங்கள் இங்கே சக்கை போடு போட்டுள்ளன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.

  1,004 இருக்கைகளைக் கொண்ட பிரமாண்டமான திரையரங்கம். நவீனத்துக்கு மாறி, 70 எம்.எம். அகல திரை வசதி கொண்டது. 50 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வந்த பழைமையான தியேட்டர்…. இவ்வளவு இருந்தும், அண்மைக்காலமாக வருமானம் இன்றி கடும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இப்போது கொரோனா கால அடைப்பு வேறு. இந்நிலையில், செப்.1 நாளையுடன் ‘அகஸ்தியா’ திரையரங்கம் மூடப்படுகிறது.