
ஜெர்மனில் இருந்து செண்பகராமனால் இந்தியாவிற்கு எம்டன் கப்பலில் அனுப்பபட்ட ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் சென்னையில் பெற்று ஆங்கிலேயன் மீது தாக்குதல் நடத்த வேண்டிய பொறுப்பு நீலகண்ட பிரமச்சாரியிடம் கொடுக்கபட்டது..!
இதற்காக தலைமறைவு வாழ்க்கை வாழந்த அவர் ஆஷை வாஞ்சி நாதன் சுட்டுக் கொன்றதால் அந்த வழக்கில் பிரமச்சாரி குற்றவாளியாக ஆக்கபட்டார். இவரை தேடப்படும் குற்றவாளி தீவிரவாதி என அறிவித்து தேடியது ஆங்கிலேய அரசு..!
இந்த வேளையில் எம்டன் கப்பலை எதிர்பார்த்து காசியில் இருந்து சென்னை நோக்கி ரயிலில் வரும் போது ஒருவன் காட்டிக் கொடுக்க கைது செய்து சிறையில் அடைக்கபட்டார் நீலகண்டன்..!
கொடூர சிறை தண்டனைக்கு பின்பு விடுதலையான அவருக்கு வேலை கொடுக்கவோ உதவி செய்யவோ ஒருவரும் இல்லை தீவிரவாதி என ஆங்கிலேயன் அறிவித்ததால்..!
அப்படியும் சுதந்திர போராட்டத்தை விடவில்லை அவர் பகலிலே சுதந்திர பிரச்சாரம் வயிற்று பசிக்கு இரவிலே ராப் பிச்சை எடுத்து சாப்பிட்டார்.சில நாட்களில் இப்படியும் பிச்சை எடுத்து சாப்பிட்டு உயிர் வாழ வேண்டுமா என்று பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டார்.!
பசியின் கோரபிடியில் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடியவருக்கு நினைவில் வந்த ஒரே பெயர் பாரதி இங்கே தானே பாரதி உள்ளான் என பாரதியின் வீடு நோக்கி ஓடுகிறார்..!
பாரதியின் வீட்டு வாசலில் நின்று பாரதி என கத்துகிறார் வெளியே வந்த பாரதி சிறிது நேர திகைப்பிற்க்கு பின் நீலகண்டா எப்படியடா இருக்கிறாய் அடையாளம் தெரியாமல் மெலிந்து விட்டாயே என்கிறார்..!
சாப்பிட்டாயா என்கிறார் பசிக்கிறது பாரதி என்று கதறுகிறார் வீட்டிற்குள் ஓடி தேடுகிறார் அங்கேயும் உணவில்லை .!
கால் அணாவை எடுத்து வந்து முதலில் சாப்பிட்டு விட்டு வா பிறகு பேசுவோம் என்கிறார் பாரதி! அப்பொழுது பாரதி பாடிய பாடல் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்..!
இந்த நீலகண்டன் தான் பாரதியை சுமந்து சென்ற நால்வரில் ஒருவர்
எம் தேசமே எங்கே இந்த வரலாறு..?
தமிழனைஅழித்தது திராவிடம்..!
- வி. அசோகன்