ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி! பிறகு..?

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bear-wake-man
bear-wake-man

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரை கரடி வந்து தட்டி எழுப்பியது. விழித்துப் பார்த்தவர், என்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.

அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த நபரை அங்கு வந்த கரடி எழுப்பி விட்ட இந்தச் சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த விந்தையான சம்பவம் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்சில் நடந்தது.

மாத்யூ பேட் என்பவர் ஒரு நீச்சல் குளத்தின் அருகில் அக்கடா என்று தூங்கிக்கொண்டிருந்தார். அமைதியாக இருந்த அந்த இடத்திற்கு மெதுவாக ஒரு கரடி வந்தது. நீச்சல் குளத்தின் அருகில் அங்குமிங்கும் அலைந்து அதிலிருந்து தண்ணீர் குடித்தது.

அதன்பின் உறங்கிக் கொண்டிருந்த பேட் அருகில் வந்து அவர் காலை மோந்து பார்த்தது. அவர் அசையாமல் இருந்ததால் அது அவரது காலை தன் கையால் தொட்டு மெதுவாக எழுப்பியது. அதனால் தூக்கம் கலைந்து விழித்து கரடியைப் பார்த்து அதிர்ச்சியடைநதார் பேட். அங்கிருந்து கரடி ஒரே ஓட்டமாக ஓடி விட்டது.

இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.