அக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு!

Published:

corona-image-1
corona-image-1

தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று பாதிப்பு  குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இதனால் தமிழகத்தில் இதுவரையிலான ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,00,193 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,93,360ஆக உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,825 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 4,314 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் இதனால், தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170  ஆக உயர்ந்துள்ளது. 

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Related articles

Recent articles

spot_img