அக்.27: இந்தியத் தரைப்படை தினம்!

Published:

infantry-regiment
infantry-regiment

இந்தியப் படைத்துறையில் தரைப்படை மிகப்பெரிய பிரிவாகும்.
இது இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது.

இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப்பிரிவில் தீவிரப் பணியாற்றுகின்றனர். மேலும், ஏறத்தாழ 18,00,000 படையினர் இருப்புப் படையாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும். வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை படுத்தப்படவில்லை.

இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டில் இந்திய தரைப்படை உருவாக்கப்பட்டு, ஆங்கிலேய இந்தியாவின் தரைப்படை, இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாக பணியாற்றியுள்ளது. இப்படை தற்பொழுது முதன்மை தரைப்படை தலைவர் பிக்ரம் சிங் தலைமையில் செயல்படுகிறது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

தரைப்படையின் தலைமைப் பதவி பீல்டு மார்சல். இது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்நாள் வரை இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர். அவ்விருவர்: பீல்டு மார்சல் மானக்சா 1973, ஓய்வு பெற்ற பின் 30 அண்டுகள் கழித்து 1986 இல் பீல்டு மார்சல் கரியப்பா ஆவார்.

இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப்பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.

நாட்டின் பாதுகாப்பு நலன், அரசுரிமையை பாதுகாத்தல், மாநில ஒருங்கிணைப்பை பாதுகாத்தல், இந்தியாவை வேற்று நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல்
முதன்மை குறிக்கோள் ஆகும் என்பதை அஞ்சல்தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் விளக்கினார்.

Related articles

Recent articles

spot_img