
முருக பக்தரான பசும்பொன் திருமகனார் நெற்றியில் திருநீறின்றி காட்சியளிப்பது போல், குங்குமம் இன்றி காட்சி அளிப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டு, அசிங்கப் படுத்தியிருக்கிறார் கனிமொழி என்று ட்விட்டர் பதிவுகளில் பலரும் சொல்லியிருக்கிறார்கள்
கடந்த முறை பசும்பொன் நினைவிடத்தில் ச்டாலினுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து விட்டனர். அதை அந்த இடத்தில் அழிக்காமல், பின்னர் வந்து அழித்துக் கொண்டார் ஸ்டாலின் அதற்கு பழிவாங்கும் விதத்தில், இப்போது தேவர் நெற்றியிலேயே விபூதி குங்குமமின்றி அடையாளத்தை அழித்து, அவமானப் படுத்தியுள்ளனர் திமுக,,வினர் இன்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் சிலர்
ஈ வே ராமசாமி நாயக்கரின் சிலைக்கு காவி சாயம் பூசியதற்காக அரசியல் செய்து பொங்கியவர்கள், இப்போது தேவர் பெருமகனாரின் அடையாளத்தை மாற்றி, நெற்றியில் அவரது ஆன்மிகக் குறியின்றி படத்தைப் பதிவு செய்து அவமரியாதை செய்திருக்கிறார்களே! இதற்காகத்தான் இன்று தேவர் அபிமானிகள் #GoBackStalin என்று டிவிட்டரில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தெய்வத் திருமகனார் பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் நெற்றியில் இருக்கும் திருநீரை அழித்துவிட்டு தான் வாழ்த்து கூறுவது அபத்தம் @KanimozhiDMK
திருவள்ளுவர், பாரதியார் என பலரின் அடையாளங்களை திராவிட கட்சிகள் அழித்தது இப்படித்தானோ..?