
- தெலங்காணாவில் ‘கோவிலுக்கு ஓரு கோமாதா’ நிகழ்ச்சி.
- டிசம்பர் 10ம் தேதி ‘கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சி தொடக்கம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி ஹைதராபாத் வரவிருக்கிறார். கோவிலுக்கு ஒரு பசு மாடு என்ற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
டிசம்பர் 10ஆம் தேதி ‘தெலங்காணாவில் கோவிலுக்கு ஒரு கோமாதா’ நிகழ்ச்சி தொடங்கியது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் இந்த நிகழ்ச்சியை டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி தொடங்கிவைத்தார்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பசுமாடு என்ற இந்த திட்டம், டிசம்பர் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவிலுக்கு பசுமாடும் கன்றும் ஒய்வி சுப்பாரெட்டி அளித்தார்.

‘சனாதன இந்து தர்ம பரிரக்ஷணை’ யில் ஒரு பகுதியான பசுப் பாதுகாப்புக்காக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பசுமாடு நிகழ்ச்சி தொடங்க வேண்டும் என்று டிடிடி தர்மகர்த்தா மண்டலி தீர்மானித்திருந்தது. இதன்படி இரண்டாவது நிகழ்ச்சியாக தெலங்காணாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
டிசம்பர் 7ம் தேதி விஜயவாடா ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் சுப்பா ரெட்டி இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைமையில் திருமலையிலிருந்து பசுக்களை எடுத்து வந்து அம்மனுக்கு அளித்தோம் என்று கூறினார்.
தெலங்காணா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் கூட பீடாதிபதிகளின் தலைமையில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் பசுக்களை கொடுக்க உள்ளோம் என்று கூறினார்.
பக்தர்கள் பசுக்களை தானம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு பசுக்களை தானம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பசு பாதுகாப்புக்காக கோவில் அதிகாரிகள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒய்வி சுப்பாரெட்டி தெளிவு படுத்தினார்.