
- கர்னூலில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்த குண்டர்கள்.
- காரணம் அறிந்து அனைவரும் அதிர்ச்சி.
கர்னூல் மாவட்டம் கூடூர் மண்டலம் பொன்னகல்லு என்ற கிராமத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகத்தை குண்டர்கள் நெம்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்தார்.
ஆலயங்களின் மீது தாக்குதல்களும் விக்கிரகங்களை நாசம் செய்வதும் கண்டிக்கத்தக்கது என்று டிடிபி தலைவர் சந்திரபாபு அறிக்கை விடுத்தார்.
கர்னூல் மாவட்டம் பொன்னகல்லுவில் ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரகத்தை நெம்பி எடுத்துள்ளார்கள். அரசாங்கத்தின் உதாசீனத்தால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று சந்திரபாபு நாயுடு குறை கூறினார். மாநில அரசாங்கம் இது போன்ற தீய செயல்களை மீண்டும் மீண்டும் நடக்க விடுகின்றது என்றும் கோவில்களுக்கு பிரத்தியேகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கோரினார்
ஆஞ்சநேய சுவாமி விக்ரகத்தை குண்டர்கள் எதற்காக தோண்டி எடுத்தார்கள் என்று அறிய வந்தபோது அதிர்ச்சியான விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. புதையல் ஏதாவது கிடைக்கும் என்பதற்காகவே சுவாமி விக்ரகத்தை தோண்டியதாகத் தெரிகிறது.
நூறாண்டு கால வரலாறு உள்ள ஸ்ரீதாஸ் ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தை புதையலுக்காக குண்டர்கள் நாசம் செய்து உள்ளார்கள். புதையலுக்காக பள்ளம் தோண்டி அங்கிருந்த சில விக்ரகங்களை உடைத்தெறிந்து உள்ளார்கள்.
அனுமான் விக்கிரகத்தைத் தோண்டி சிதைத்ததற்காக ஹிந்து சங்கங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் விஹெச்பி காரிய கர்த்தாக்கள் தர்ணா செய்தார்கள்.
கோவில்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடினமான நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள்.