
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 15-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு கொரோனா காரணமாக 24-ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் சொர்க்கவாசல் அன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக 450 போலீசார் சுழற்சி முறையிலும், சொர்க்கவாசல் திறப்பு அன்று 1,200 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.