
மதுரையில் பள்ளன் குடும்பன் தேவேந்திர குலத்தான் பன்னாடி வாதிரியார் கடையன் ஆகிய உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை அறிவிக்கக் கோரியும் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
தமிழக அரசு பள்ளன் குடும்பன்,தேவேந்திர குலத்தான், குடும்பன், பண்ணாடி, வாதியார், கடையன் ஆகிய 7 உட் பிரிவுகளை பட்டியலில் இருந்து நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
மேலும் அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து மதுரையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி, ஒன்றிய பொறுப்பாளர்கள் சின்னராஜா, ஜான் முருகன், பிரபாகரன் முன்னிலையிலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 உட் பிரிவுகளையும் பட்டியலில் இருந்து நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என கோஷம் எழுப்பினர் இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டார்கள்