
அரசியல் கட்சி தொடர்பாக தலைமையிடத்திலிருந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி மூலம் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவைக் கட்சி என ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பாபா முத்திரை சின்னம் கேட்டார் ஆனால், அவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை ஊடகங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது.
ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு, எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இன்றைய ஊடகங்களின் செய்தி திகழ்ந்தது.
இந் நிலையில் ரஜினி மக்கள் மன்றம் இன்று இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
