
தற்காலத்தில் தேசம், மாநிலம் என்பது தம் சொந்த சொத்தாக, தனியார் கம்பெனிகளாக செய்வதற்கும், தமக்குப் பிறகு தம் வாரிசுகளும் உறவினர்களும் அதனை ஆளுவதற்கும் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் தலைவர்களே நமக்கு எங்கும் தென்படுகிறார்கள். அவர்களும், அவர்களை நம்புபவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்த இந்த சம்பவத்தை நம்புவார்களோ நம்பமாட்டார்களோ தெரியாது. ஆனால் அரசியல் தலைவர்களில் கூட விழுமியங்கள் இருந்த நாட்களில் நடைபெற்ற சம்பவம் ஆதலால் இது பலருக்கும் கண் விழிப்பாக இருக்கும்.
சர்தார் வல்லப பாய் பட்டேலுக்கு ஒரு பெண். மணி பென் பட்டேல். ஒரே ஒரு மகன் தஹ்யாபாய் பட்டேல்.

சர்தார் பட்டேல் பாரத துணை பிரதமராக இருந்த நாட்களில் அவருடைய புதல்வன் பம்பாயில் புகழ் பெற்ற தொழில் அதிபராக விளங்கினார். தந்தை எத்தகைய நேர்மையானவரோ அவருடைய மகன் அவ்வளவு நேர்மையற்றவராக இருந்தார். தந்தைக்குத் தெரியாமல் அவருடைய பதவியை முன்னிட்டுக் கொண்டு பல அக்கிரமங்களை செய்தார். பட்டேலுக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. உடனே அப்போதைய தொழிலாளர் துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் உள்ள செய்தியை படித்தால் சர்தார் பட்டேலின் நேர்மை என்ன என்பதும் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் தெரியவரும்.
” என்னுடைய மகனின் தொழிற்சாலையை குறித்தோ, அவருடைய நடத்தை குறித்தோ எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. அரசாங்கத்திலிருந்து என் மகன் மீதும் அவருடைய தொழிற்சாலை மீதும் எந்தவித நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கும் நீங்கள் பின்வாங்க வேண்டாம். நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டாலும் நான் அதில் தலையிட மாட்டேன்” என்று அந்த கடிதத்தில் உள்ளது.

இப்போதைய அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பிரச்சாரத்திற்காக செய்த சடங்காக தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் நாம் இந்நாட்களில் பார்ப்பது இது போன்ற சடங்குகளை மட்டுமே.
ஆனால் அவர் நேர்மையையும் அவருடைய திடசங்கல்பத்தையும் சந்தேகப்படுபவர்களுக்காக ஒரு விஷயம் என்னவென்றால்… சர்தார் பட்டேல் அநீதியை கொஞ்சமும் ஏற்கக்கூடியவர் அல்ல. அவருடைய ஒரே மகனின் முகத்தை கூட பார்ப்பதற்கு அவர் நிராகரித்தார். தன்னுடைய இறுதி நாட்களில் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி வசித்து அங்கேயே மரணமடைந்தார். இந்த நாட்களில் இது போன்ற அரசியல் தலைவர்களை நம்மால் யூகிக்க முடியுமா?