‘இதய தெய்வம்’ ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டும் அமைச்சர் உதயகுமார்!

அடடே... அப்படியா? மதுரை லைஃப் ஸ்டைல்
jayalalitha-temple-build
jayalalitha-temple-build

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர் அருகே ஜெயலலிதா பேரவை செயலாளரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வருகிறார்.
இந்த பணியினை ஆய்வு செய்த போது அவருடன் அவரது தந்தையார் ஆர்.போஸ், அவரது தாயார் பி.மீனாள் மற்றும் கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி உட்பட பலர் இருந்தனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் ஜெயலலிதா. எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அம்மாவை வழிபட்டு வருகிறோம்.

அந்த தெய்வத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் நல்லாசியுடன் தற்போது கழக அம்மா பேரவை சார்பில் கோயில் கட்டி வருகிறோம்.

திருக்கோயிலில் ஜெயலாலிதாவுக்கு திரு உருவ வெண்கலச் சிலையும் ,அதேபோல் எம்.ஜி.ஆருக்கு முழு நீள வெண்கலச் சிலையும் அமைக்கப்பட உள்ளது .

அதுமட்டுமில்லாது இந்த திருக்கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணி விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது’ என கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.