
கமலஹாசன் கட்சியைச் சேர்ந்தவர் இன்று பாஜக.,வில் ஐக்கியமானார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற சூழ்நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன கட்சிகளில் இருக்கும் சிலர் கட்சி மாறுவதும் நடைபெற்று வருகிறது தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் பலர் இணைந்து வருகின்றனர் குறிப்பாக திமுக வில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்
இன்று, மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அந்த கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் முன்னிலையில் பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து, அவர் பாஜகவில் இணைந்தார் உடன் பாஜக தமிழ் மாநில தலைவர் வேல்முருகன் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் இருந்தனர்