
இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சகல வைணவ ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பஞ்ச பூத தலங்களில் சிறப்பானதாகப் போற்றப்படும் திருஅண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று பரமபதவாச திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருக்கோயில் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
பின்னர், வேணுகோபால ஸ்வாமிக்கு வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கஜலட்சுமி மற்றும் வைகுந்த வாசலுக்கு தீபாராதனை செய்விக்கப் பட்டு, வைகுந்த வாசல் திறக்கப்பட்டது.
- செய்தி: எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை