
திமுக., நடத்தும் கிராமசபைக் கூட்டத்தில், பெண் ஒருவர் எழுப்பிய கேள்வியால் திடீர் சலசலப்பு எழுந்தது. இதனால் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து திமுக.,வினரால் அந்தப் பெண் வெளியேற்றப் பட்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக., பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறது. அதன்படி, இன்று கோவை தேவராயபுரம் திமுக கிராம சபைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊர் மக்களிடம் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால், பெண்மணி ஒருவர் எழுப்பிய எதிர்க்கேள்வியால் கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
திமுக., நடத்தும் கிராமசபைக் கூட்டத்தில், தாம் பேசத் தொடங்கும் முன்பாக, ஒரு பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன் எனபதில் கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து, திமுக., கிராம சபைக் கூட்டத்தில் பதில் கேள்வி கேட்க முயன்ற குற்றத்துக்காக, அந்தப் பெண் அங்கிருந்தவர்களால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே, திமுக.,வின் கிராமசபைக் கூட்டத்தில், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்க முயன்ற அந்தப் பெண் அமைச்சர் எஸ்பி வேலுமணியால் அனுப்பப்பட்டவர் என்று திமுக.,வினர் குற்றம் சாட்டினர்.
திமுக.,வினர் அழைத்து வந்த நபர்கள் இவ்வாறு கேள்வி கேட்கமாட்டார்கள் என்பதால், கிராம சபை கூட்டத்திற்கு இடையூறு செய்ய வேண்டும் என அதிமுக.,வினர் இவ்வாறு ஒரு பெண்ணை திமுக.,வின் கிராமசபைக் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளனர் என்று, அக்கட்சியினர் குறை கூறினர்.