
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் தலைமையில் பழநிக்கு பாதயாத்திரை செல்வதாகப் புறப்பட்டனர். இதனைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் தலைமையில் பழநிக்கு பாதயாத்திரை செல்வதாக இருந்தது. ஆனால் அதனைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் திருமண மண்டபத்தில் அவர்களை அடைத்து வைத்தனர்.
ஆண்டுதோறும் பழனிக்கு பாதயாத்திரை செல்ல திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிருந்துதான் வழக்கமாகத் தொடங்குவார்கள். அது போல், இந்த ஆண்டும் திருப்பரங்குன்றத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்ல முற்பட்டபோது, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இது குறித்த செய்தி அறிந்ததும், சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பினர் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். சினிமா திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்கள் அனுமதியாம், டாஸ்மாக் கடைகளில் கடும் நெரிசலுடன் சரக்குகள் வாங்க அனுமதியாம்…. ஆனால் ஒழுக்கக் கட்டுப்பட்டுடன் மத வழிபாடு நடத்துவதற்கு மட்டும் தடையாம்! இதுதான் தமிழக அரசு தைப்பூச விழாவுக்கு காட்டுகின்ற மதிப்பா, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு காட்டுகின்ற மரியாதையா? தைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை விட்டால் மட்டும் போதாது… இது போன்று பாத யாத்திரை பக்தர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்… அவர்களைக் கைது செய்து அடைத்து வைத்து கட்டுப்பாடுகள் விதித்து அவமரியாதை செய்யக் கூடாது என்று கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன.
இதை அடுத்து, விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப் பட்டனர். பின்னர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து பழனிக்கு யாத்திரையை தொடங்கினர்.