
முருகப் பெருமானின் திருநாளான தைப் பூசத் திருவிழா உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. ஞானக் கடவுள் முருகப் பெருமானின் பெருந்திருவிழா தைப்பூசம். இந்த தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாத யாத்திரையாக காவடி எடுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கம்.
தமிழக அரசு தைப்பூச பெருவிழாவிற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பது இந்து தமிழர் கட்சியின் நெடுநாளைய கோரிக்கை.
இந்து தமிழர் கட்சி மற்றும் முருக பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசு பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருவிழாவில் சேர்த்து அறிவித்ததற்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றியை வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகளை சிரமமின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்.
பழனியில் இது போன்று வரக்கூடிய முருக பக்தர்களின்
காவடி குழுக்கள் பக்தர்கள் சமையல் செய்து உணவு சாப்பிட தேவையான பெரிய அளவிலான சமையல் கூடம் மற்றும் அன்னதானக் கூடத்தை தரைத் தளத்தில் உருவாக்கிட வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.
கோவில் நடைமுறைகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்கள் அப்படி எனில் தங்கத் தேரோட்டம் நடைபெற திருக்கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஏற்கெனவே கோவில்களில் இருக்கக் கூடிய அன்னதான கூடங்களில் வரக்கூடிய பக்தர்கள் இலை போட்டு அமர்ந்து சாப்பிடக் கூடிய பழைய நடைமுறை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.
- இராம. இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி, நிறுவனதலைவர்