
தற்போது கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பூசி – கோவாக்ஸின் அரசால் பொதுமக்களுக்கு போட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இந்தத் திட்டம் நேற்று மத்திய மாநில அரசுகளால் தொடங்கப்பட்டது.
கோவாக்ஸின் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதே நேரம் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மதுரையில் வைத்து இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.
இருப்பினும் கோவாக்ஸின் குறித்த விஷமப் பிரசாரங்களை ஊடகங்களும், அதன் நம்பகத் தன்மை மீதான பிரசாரங்களை அரசியல் ரீதியாக முன்னெட்டுத்து பொது மக்கள் மத்தியில் கேள்விக் குறியை அரசியல்வாதிகளும் விதைத்து வரும் நிலையில், பிரபலங்கள், மருத்துவர்கள் என சிலர் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரும், அரசு டாக்டர்கள் சங்க தென்காசி மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (DMS wing) டாக்டர் இரா. ஜெஸ்லின் இன்று, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நலà¯à®² செயà¯à®¤à®¿à®•à®³à¯