
ஆக்ராவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்று மாணவிகள் பாய்ஃப்ரண்ட் இல்லாமல் கல்லூரிக்கு வரவேண்டாம் என அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவின் பிரபல கல்லூரிகளில் முதன்மையானது செயின்ட் ஜான்ஸ் கல்லூரி. இந்த கல்லூரியின் பெயரில், பேராசியர் ஆசிஷ் ஷர்மா என்பவர் கையெழுத்திடப்பட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், வரும் வரும் பிப்ரவரி மாதம் 14-க்குள் ஒவ்வொரு மாணவியும் ஒரு பாய்ஃப்ரண்ட் வைத்துக் கொள்ளவேண்டும். இது மாணவிகளின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு.
எனவே, தனியாக வரும் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை. இதனால், மாணவிகள் தங்கள் பாய்ஃப்ரண்ட் உடன் அண்மையில் எடுத்த போட்டோவை காண்பிக்கவேண்டும்