திருப்பதி தேவஸ்தானத்திற்கு 30 கோடி மதிப்புள்ள இடத்தை நன்கொடையாகக் கொடுத்த பிரபல நடிகை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
kantchana1
kantchana1

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டவுள்ள கோயிலுக்காக 30 கோடி மதிப்புள்ள இடத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார் பழம்பெரும் நடிகை காஞ்சனா.

நாட்டில் அதிகளவில் பக்தர்கள் வரும் கோயிலில் திருப்ப்தி தேவஸ்தானமும் ஒன்று. அதனால் அதன் கிளைக் கோயில்கள் அண்டை மாநிலங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்குக் கோயில் கட்ட சென்னை ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் பழம்பெரும் நடிகையான காஞ்சனாவுக்கு சொந்தமானது.

kantchana
kantchana

இந்த இடத்தின் இன்றைய மதிப்பு 30 கோடிக்கும் மேல். இந்நிலையில் நடிகை காஞ்சனா அந்த இடத்தை கோயில் கட்டும் பணிகளுக்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளாராம்.

இவர் ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்துக்கு 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை எழுதிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.