அம்மாடியோவ்..அவ்வளவா? கறிவேப்பிலை விலை கிலோ ரூ.100!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
curry-leaves
curry-leaves

கடைகள் மற்றும் மார்க்கெட்களில் பொது மக்களுக்கு இலவசமாகவே கொடுக்கப்படும் கறிவேப்பிலை விலை மதுரையில் கிலோ ரூ.100 ஐ தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விரைவில் ரூ.100 ஐ தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கு கறிவேப்பிலையும் தப்பவில்லை. அதன் விலையும் ரூ.100 ஐ தொட்டுள்ளது.

கடைகளில் இலவசமாக வாங்கும் கறிவேப்பிலையின் விலை உயர்வு மக்களை கவலையடைய வைத்துள்ளது.

கருவேப்பிலையுடன் இலவசமாக வாங்கப்படும் கொத்தமல்லியும் ஒரு கட்டு ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போக்கில் சென்றால் கறிவேப்பிலையை இனி சாமான்ய மக்கள் கண்ணில் பார்க்க முடியாது என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.