மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல்: இந்த மாத காணிக்கை விபரம்!

Published:

meenakshi kovil
meenakshi kovil

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வருமானம் 83 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்துள்ளதென கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 11 கோயில்களில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் பொருட்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறையும் எண்ணப்படும்.

கொரோனா பரவலுக்கு பிறகு, மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை, மாதம் ஒருமுறை எண்ணப்பட்டு வருகிறது.

undial - 2026

இந்நிலையில், இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 83,62,548 ரூபாய் ரொக்கப் பணமும், 725 கிராம் தங்கமும், 1 கிலோ வெள்ளியும், 49 வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img