
சிவப்பு பூசணி விதை அல்வா
தேவையானவை:
சிவப்பு பூசணி விதை – 50 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
நெய் – 50 கிராம்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
பாதாம் துருவல் – ஒரு டீஸ்பூன்,
குங்குமப்பூ – சிறிதளவு,
மஞ்சள் அல்லது ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:
சுடுநீரில் பூசணி விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து நைஸாக அரைக்கவும். பாத்திரத்தில் சர்க்கரை, ஃபுட் கலர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நுரைவரும்போது அரைத்த பூசணி விழுது, நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம் துருவல், குங்குமப்பூ கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.