சஞ்சனா கணேசனை மணந்த ஜஸ்ப்ரீத் பும்ரா!

Published:

pumbra 1 - 2026

.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மணந்து தமிழகத்தின் மருமகனானார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. தனிப்பட்ட காரணங்களால்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு பும்ரா இந்திய அணியில் இருந்து விடுப்பு எடுத்தார். மார்ச் 12 முதல் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. பும்ரா திடீரென விடுப்பு எடுத்து குறித்து சில தகவல்கள் சுற்றி வருகின்றன. அதில் அவர் திருமணமும் அடங்கும்.

pumbra 2 1 - 2026

அதுவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சஞ்சனா கணேசனை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற செய்தி பரவியது.

இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா – சஞ்சனா கணேசன் ஜோடிக்கு இன்று கோவாவில் திருமணம் முடிந்துள்ளது. பிங்க் நிற உடையில் மணமகன் – மணமகள் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகாக இருக்கிறது. இப்போது பும்ரா – சஞ்சனா தம்பதியனருக்கு இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img